Help others to know the Truth.
jaikumarads@gmail.com

Monday, March 20, 2017

Human life cycle - Pattinathar


Unknown facts and Known facts Human life - Pattinathar



வாழ்க்கைச்சக்கரம்

The most brilliant explanation on Human life, genius Pattinathar explained whole life cycle in 11th Century 


ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊருசுரோணிதம் மீதுகலந்து

பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைககள் என்ற

உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து

மகளிர் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீரறி வாகிவளர்ந்து-

ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாயஇருபோவென நாமம்விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடியபாலரொ டோடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே

உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின் கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து

மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க

மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சூழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவதுகண்டு

மனது பெறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி

ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகொலமும் வேறு பிரிந்து

வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்து இரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிராத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே

வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும்நேரம் இருமல் பெறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுனையும் அழிந்து
தோகையர் பாளர்கள் கோரணி கொண்டு

கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால்வலி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனிஎன தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன் முறை பேசும் என உறைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று
நெஞ்சுதடுமாரி வரும்நேரமே

வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து

வலைகொடுவீ சி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து

பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர் தரமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளைமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து

விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே!

Share:

0 comments:

Ads

Learn more

Unknown Hinduism/ Known Hinduism

Support

Follow This

Search This Blog